இந்தியா
“விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த கொடூர திமுக அரசு” – அன்புமணி

“விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த கொடூர திமுக அரசு” – அன்புமணி
பாமக சார்பில், உழவர் மாநாடு இன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, மேல்மா சிப்காட்டில் 3 ஆயிரத்து 500 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை தடுத்து நிறுத்தியது பாமக. உலகில் எத்தனையோ கொடுங்கோல் ஆட்சிகள் நடைபெற்றது. வெள்ளக்காரன் ஆட்சியை விட தற்போது திமுக ஆட்சியில் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த கொடுங்கோல் ஆட்சி திமுக என குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் ஒரு சென்ட் நிலம் எடுத்தாலும் அந்த இடத்தில் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியும் நிற்கும். டங்ஸ்டன் தொழிற்சாலை தூத்துக்குடி வேதாந்தா நிறுவனம் தான் தொடங்க உள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் நான் பதவியில் இருக்கும் வரை டங்ஸ்டன் நிறுவனத்தை தொடங்க விடமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். மேலூரில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்தை எடுத்து விட மாட்டேன் என கூறும் முதலமைச்சர், நெய்வேலியில் 50,000 ஏக்கர் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்து இரட்டை வேடம் போடுவதாக குறிப்பிட்டார். விவசாயிகளை படுகொலை தள்ளக்கூடிய திராவிட மாடல் அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று பேசினார்.
மேலும், உழவர்கள் எதிர்கொள்ளும் 10 பிரச்சனைகள் என
உழவர்களின் விலை பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
உழவர்கள் விளைவிக்கும் அனைத்து விளைபொருளும் கொள்முதல் செய்யப்படுவதில்லை.
உழவர்களின் வருமானத்தை உயர்த்த அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை.
பாசன வசதிகள் செய்து தரப்படவில்லை.
வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை.
இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது உரிய இழப்பீடுகள் வழங்கப்படுவது கிடையாது.
விவசாயிகளுக்கு கடன் குறித்த நேரத்தில் கிடைக்காது.
தொழில் மையமாக்கள் என்ற பெயரில் வேளாண் நிலங்களை பறிப்பது.
தோட்டக்கலைப் பயிர்கள் மூலிகைப் பெயர்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்கப்படாதது.
வேளாண்மை கல்வி மட்டும் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படாதது.
உழவர்களின் உற்பத்தி பொருட்களை விலை நிர்ணயம் கிடைக்காதது.
உழவர்கள் விளைவிக்கும் அனைத்து விலை பொருட்களையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் அமைக்க வேண்டும்.
உழவர்களின் வருமானத்தை உயர்த்த அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் கடந்த 55 ஆண்டுகளில் ஒரு டிஎம்சி திறன் கொண்ட பாசன திட்டங்கள் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை. வேளாண்மையில் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் நாடு என்றால் அது இஸ்ரேல்தான். இஸ்ரேல் ஒரு பாலைவன நாடு; விவசாயம் செய்ய ஏற்ற மண்ணும் இல்லை, மழையும் இல்லை. மழை பெய்ய வேண்டுமானால் மரங்கள் தேவை, அதனால் 12 ஆண்டுகளில் 8 கோடி மரங்களை இஸ்ரேல் நாட்டில் நட்டுள்ளார்கள்.
விவசாயிகள் வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொழுது தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 20 பருவங்கள் சாகுபடி நடக்க வேண்டும், 8 பருவங்களில் மட்டுமே சாகுபடி நடைபெற்று உள்ளது.
மீதமுள்ள பருவங்களில் இயற்கை சீற்றத்தால் விவசாயம் செய்யப்படவில்லை, அவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை.
இந்தியாவில் உழவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதற்குக் காரணம் பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலும் கடன் கிடைக்காததால் தனிநபர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்வதால் குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்க முடியாமல், கடனில் சிக்கி அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
நாடு முன்னேற தொழில் வளர்ச்சி என்பது முக்கியம், மாற்று கருத்து கிடையாது. தொழில் வளர்ச்சியால் வேளாண்மை நிலங்களை அழிக்கக் கூடாது. அனுமதிக்க முடியாது. தோட்டக்கலை பயிர்கள், மூலிகை பயிர் பரப்பளவை அதிகப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் வேளாண்மையில் முன்னுக்கு வராததற்கு காரணம் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்யாததுதான். உழவர் நலனுக்காக திமுக அரசு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. உழவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்த கொடூர அரசு திமுக அரசு. திமுக முதல்வர் ஸ்டாலின், விலை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக குரல் கொடுத்தார். ஆட்சிக்கு வந்த பிறகு தலைகீழாக மாறிவிட்டார்” என குறிப்பிட்டார்.
“டிசம்பர் 23-ஆம் தேதி சரண் சிங் பிறந்தநாள் விழா, உழவருக்காக வாழ்ந்து உழைத்தவர். ஜமீன்தார் முறை ஒழிப்பு சட்டம், உழைப்பவர்களுக்கு நிலம் சொந்தம் என உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே முற்றுகை போராட்டம் நடைபெறும். அந்தப் போராட்டம் 2025-ல் நடைபெறும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று பேசினார்.