இந்தியா
காலிக்குடம் என முதல்வர் விமர்சனம்; பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி

காலிக்குடம் என முதல்வர் விமர்சனம்; பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ அரங்கத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கேக் வெட்டி சிறப்பித்தார்.
தொடர்ந்து தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையிலும் ஈபிஎஸ் பங்கேற்றார். அதன்பின்னர் மேடையில் பேசிய அவர், “ஜெருசலேம் புனித பயணத்திற்கு, பயணத்துக்கு முன்பே பயனாளிகளுக்கு நிதியை விடுவிக்க ஆவணம் செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், “மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கடிதம் எழுதியதாக தெரியவில்லை” என்றார். மேலும், “மத்திய அரசுக்கு எதிராக திமுக எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை” எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
அதேபோல், சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “காலிக்குடம் உருண்டால் அதிகமாக சத்தம் வரும்” என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் தன்னை பேசவிடாமல் முதல்வர், அமைச்சர்கள் தடுத்ததாக தெரிவித்தார்.