Connect with us

பொழுதுபோக்கு

உண்மையை சொன்ன காதலி: வசமாக சிக்கிய மனோஜ் – ரோஹினி: முத்து ஆக்ஷன் ரெடி!

Published

on

Manoj Rohini Muthu Siragadikka AAsai

Loading

உண்மையை சொன்ன காதலி: வசமாக சிக்கிய மனோஜ் – ரோஹினி: முத்து ஆக்ஷன் ரெடி!

சிறகடிக்க ஆசை சீரியலில், தனது முன்னாள் காதலியிடம் ஏமார்ந்த மனோஜ், அவரிடம் இருந்து பணத்தை வாங்கியதை வீட்டிற்கு சொல்லாமல் மறைத்து ஷோரும் தொடங்கிய தற்போது முத்துவுக்கு இந்த உண்மை தெரியவந்துள்ளது.தமிழ் சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் ப்ரைம்டைம் சீரியலான இதில், வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் நடிகரும் இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த சீரியலில் காமெடி வில்லனாக நடித்து வரும் கேரக்டர் மனோஜ். படிப்பாளியாக இருந்தாலும், நிரந்தரமாக ஒரு வேலை இல்லாமல் அம்மா சப்போர்ட்டில் வாழ்ந்து வரும் இவர், ரோஹினியை திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்த ரோஹினி உண்மையை மறைத்து திருமணம் செய்துள்ளார்.இதனால் ரோஹினி எப்போது மாமியார் விஜயாவிடம் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் அவர் தப்பித்துக்கொண்டே வருகிறார். அதேபோல் அப்பாவின் பணம் 30 லட்சத்தை தனது முன்னாள் காதலியிடம் ஏமார்ந்த மனோஜ் அதை திருப்பி வாங்கிவிட்ட நிலையில், அதை வீட்டிற்கு தெரியாமல், ரோஹினியின் அப்பா பணம் அனுப்பியதாக கூறி பர்னிச்சர் ஷோரும் தொடங்கிவிட்டார். இந்த உண்மை எப்போது தெரியவரும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.இதனிடையே தற்போது, மனோஜின் முன்னாள் காதலி யார் என்பதை மீனாவின் தங்கையிடம் இருந்து தெரிந்துகொண்ட முத்து நேராக அவரை போய் பார்க்க, அவரும், நான் 30 லட்சத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டேன் என்று சொல்கிறாள். இதனை நம்பிய முத்து, இதை எங்கள் வீட்டில வந்து சொல்ல முடியுமா என்று கேட்க, கண்டிப்பாக வருகிறேன். அவர்களுடன் என்க்கு இன்னொரு கணக்கு பாக்கி இருக்கிறது என்று சொல்கிறார். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது.குடும்பத்திற்கு தெரியாமல் மனோஜ் ரோஹினி இருவரும் பணத்தை ஏமாற்றியுள்ள நிலையில், தனக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பதை மனோஜ்க்கே தெரியாமல் மறைத்துள்ளார் ரோஹினி. இதனால் இவர்கள் இருவரும் எப்போது மாட்டுவார்கள் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன