இந்தியா
தங்கம் விலையில் மாற்றமா? இன்று சவரன் எவ்வளவு?

தங்கம் விலையில் மாற்றமா? இன்று சவரன் எவ்வளவு?
சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (டிசம்பர் 23) எந்த வித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.
அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,100-க்கும், ஒரு சவரன் ரூ. 56,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,745-க்கும், ஒரு சவரன் ரூ. 61,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.99-க்கும், ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால், தங்கம் விலை குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், தங்கம் விலை இன்று உயராததால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைந்துள்ளார்கள்.