Connect with us

பொழுதுபோக்கு

எதிர்நீச்சல் சீசன் 2 கதை இதுதான்: குணசேகரன் கேரக்டர் எப்படி? இயக்குனர் ஓபன் டாக்!

Published

on

Ethirnas

Loading

எதிர்நீச்சல் சீசன் 2 கதை இதுதான்: குணசேகரன் கேரக்டர் எப்படி? இயக்குனர் ஓபன் டாக்!

சன்டிவியின் சீரியல்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.  அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் சிறப்பாக எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில்,  இந்த சீரியலில் வில்லன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்து வந்தார். ஆனால் அதற்கு முன்பு அந்த கேரக்டரில் நடித்து வந்த இறந்த நடிகர் மாரிமுத்து இடத்தை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தது.மேலும் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. இதனிடையே சமீபத்தில் வெளியான எதிர்நீச்சல் சீரியலின் 2-ம் பாகத்திற்கான டீசரில், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை ஆகியோர் வரும் நிலையில், மதுமிதாவுக்கு பதிலாக நடிகை பார்வதி ஜனனி கேரக்டரில் நடித்துள்ளார்.இதனிடையே, எதிர்நீச்சல் 2 சீரியலில், முதல் சீசனில், ஆதிரையாக நடித்த நடிகை சத்யா, தற்போது விஜய் டிவியின் தனம் சீரியலில் நடித்து நடித்து வருவதால் அவர் 2-வது சீசனில் நடிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது. அதேபோல் குழந்தை தாராவாக நடித்து வந்த ஃபர்சானாவும் சீரியலில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக பிரஜானா நடிக்க உள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.  இன்று (டிசம்பர் 23) முதல் இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் சீசன் 2 ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சீரியலின் கதை என்ன என்து குறித்து இயக்குனர் திருச்செல்வமே கூறியுள்ளார். முதல் சீசனில், ஆணாதிக்கம் மிகுந்த ஒரு குடும்பத்திற்க மருமகள்களாக வந்த 4 பேர் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சீசன் முடிவில் ஆதி குணசேகரன் திருந்தி ஜெயிலுக்கு செல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.இதனால் 2-வது சீசனில் என்ன கதை என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இயக்குனர் திருச்செல்வம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், வெவ்வேறு குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள் ஒரு வீட்டுக்கு மருமகளாக வந்த பிறகு அவர்களுடைய கனவுகள் அனைத்தும் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் தன்னுடைய கனவுகளை யாருக்காகவும் எதற்காகவும் கைவிடக்கூடாது என்று தைரியத்தை சொல்லி ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் கனவை நிறைவேற்ற பாடப்படும் விதமாக ஜனனி கேரக்டர் வருகிறார்.இனி ஈஸ்வரி அவருக்கு தெரிந்த அனுபவங்களை புகட்டும் விதமாக அவருடைய கேரக்டர் இருக்கப் போகிறது. ஈஸ்வரி போலவே நந்தினி தனக்கு தெரிந்த சமையல் விஷயத்தை வைத்து எப்படி படிப்படியாக முன்னேறி காட்ட போகிறார். ரேணுகா இளம் வயதில் தன்னால் சாதிக்க முடியாமல் போயிருந்தாலும் வயதான பிறகு எப்படி நாம் சாதிக்கலாம் என்று யோசித்து இப்போது பரதத்தின் மூலம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு வழியாக காட்டியாக இருக்கப் போகிறார்.இவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படி கற்களிலும் வித்தியாசமான குணசேகரனை சந்திக்கப் போகிறார்கள். வீட்டில் மட்டுமல்லாமல் வெளியில் அந்த குணசேகரன் எப்படி ஓவர் டேக் செய்து சாதனை புரிகிறார் என்பதை தான் இந்த நாடகத்தின் கதையாக இருக்க போகிறது. அதோடு நீங்கள் எதிர்பார்த்த பல விஷயங்கள் இருக்கலாம். சில விஷயங்கள் இல்லாமலும் இருக்கலாம்.இத்தனை விஷயங்கள் நான் சொல்லி இருப்பதால் இனி இந்த சீரியல் பரபரப்பு மட்டும் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். நக்கல், நையாண்டி, கலகலப்பு என அனைத்தும் தூக்கலாகவே வைக்கப்பட்டிருக்கும். முழுக்க முழுக்க நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களை எதிர்நீச்சல் 2 கதையுடன் சந்திக்கிறேன் என்று இயக்குனர் திருச்செல்வம் கூறியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன