உலகம்
மன்னரை வரவேற்ற சிட்னி மக்கள்!

மன்னரை வரவேற்ற சிட்னி மக்கள்!
பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் மற்றும் கமிலா ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். சிட்னி நகரிற்கு சென்ற பிரித்தானிய மன்னரை காண்பதற்காக மக்கள் வீதிகளில் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க சிட்னி துறைமுகமான ஒபெரா ஹவுசிற்கு மன்னர் சார்ள்ஸ் விஜயம் செய்துள்ளார். மன்னரின் இந்த விஜயம் பிரித்தானிய அரச குடும்பத்தின் சார்பில் அமையப்பெற்ற முக்கியத்தும்வாய்ந்த பயணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மன்னரின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கென்பரா நகரில் சிலர் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். எனினும் சிட்னி மக்கள் மத்தியில் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு சிறந்த வரவேற்பிருப்பதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலுள்ள பழங்குடியின சமூகத்தையும் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் சந்தித்துள்ளார்.