பொழுதுபோக்கு
கண்ணால் பேசிய ரஞ்சித்: ப்ளைன் கிஸ் கொடுத்த மனைவி: பிக்பாஸில் நடந்த ரொமான்ஸ் மீட்!

கண்ணால் பேசிய ரஞ்சித்: ப்ளைன் கிஸ் கொடுத்த மனைவி: பிக்பாஸில் நடந்த ரொமான்ஸ் மீட்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் 70 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்பட்ட நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், வெளியில் வந்தவுடன் கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 7 சீசன்கள் முடித்துள்ள நிலையில், 8-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. சின்னத்திரை, சமூகவலைதளம் ஆகியவற்றில் முன்னணி பிரபலங்களாக இருக்கும் பலர் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியை, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்றாலும், ஒவ்வொரு வார இறுதியில் விஜய் சேதுபதி வரும் எபிசோடுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறியதில்லை. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில்,கடந்த இரு வாரத்திற்கு முன்பு, ஆர்.ஜே.ஆனந்தி மற்றும் சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் தர்ஷிகா, மற்றும் சத்யா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதில் சனிக்கிழமை சத்யாவும், அடுத்த நாள் தர்ஷிகாவும் எலிமினேட் செய்யப்பட்டர்.இதனிடையே இந்த வாரம், நடிகரும் இயக்குனருமான ரஞ்சித் வெளியேற்றப்பட்டுள்ளார். கவுண்டம்பாளையம் என்ற ஒரு படத்தை எடுத்து கடுமையாக விமர்சனங்களை சந்தித்த நடிகர் ரஞ்சித், இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட காரசாரமாக விவாதம் நடத்தினார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரஞ்சித் அமைதியாக இருந்தது மேலும், ஆச்சரியம் கொடுத்து.அதே சமயம், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த அவர், எந்த டாஸ்கிலும் பங்கேற்காமல், எதற்காக இவர், பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் இவரை வெளியேற்றுங்கள் என்று பலரும் கூறிவந்தனர். இதனிடையே நேற்றைய எபிசோட்டில் நடிகர் ரஞ்சித், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 70நாட்கள் வீட்டில் இருந்த அவர், வெளியில் வரும்போது மிகுந்த உற்சாகத்துடன் வந்த நிலையில், மேடைக்கு வந்தவுடனே ஒரு ஷாக் ரியாக்ஷன் கொடுத்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.தனது மனைவி பிரியாராமன், அங்கிருப்பதை பார்த்த ரஞ்சித், அவரை எதிர்பாக்காதது போன்று, ஆச்சரியமான ரியாக்ஷன் கொடுத்து அசத்தினார். அதன்பிறகு இருவரும் கண்களால் பேசிக்கொண்ட நிலையில், ப்ளைன் கிஸ் கொடுத்து இருவரும் பரிமாறிக்கொண்டனர். இது தொடர்பான வீடியே இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.