Connect with us

பொழுதுபோக்கு

ஐ லவ் யூ சொல்வது எப்படி? நடிகருக்கு கற்றுக்கொடுத்த கீர்த்தி சுரேஷ்; வைரல் வீடியோ!

Published

on

Keerthi and Varun

Loading

ஐ லவ் யூ சொல்வது எப்படி? நடிகருக்கு கற்றுக்கொடுத்த கீர்த்தி சுரேஷ்; வைரல் வீடியோ!

கீர்த்தி சுரேஷ் இந்தியில் நடித்துள்ள பேபி ஜான் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, ஐ லவ் யூ தமிழ் தெலுங்க மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் எப்படி சொல்வது என்று படத்தின் ஹீரோ வருண் தவானுக்கு கீர்த்தி சுரேஷ் சொல்லிக்கொடுத்துள்ளார்.ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமான இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக ரஜினி முருகன், ரெமோ, உள்ளிட்ட படங்களில் நடித்த நடித்திருந்தார். அதேபோல்  விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக மகாநடி என்ற படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற நிலையில், இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருந்தார். தொடர்ந்து மாமன்னன் படத்தில் புரட்சிப்பெண், அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கை, என பல கேரக்டரில் நடித்த கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாக ரகு தாத்தா படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில்சமீபத்தில், தனது காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ், தனது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், பேபி ஜான் படத்தின் படப்பிடிப்பின்போது, ஐ லவ் யூ தமிழ் தெலுங்க மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் எப்படி சொல்வது என்று படத்தின் ஹீரோ வருண் தவானுக்கு கீர்த்தி சுரேஷ் சொல்லிக்கொடுத்துள்ளார்.A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)இது தொடர்பான வீடியோ பதிவை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக் தான் பேபி ஜான். அட்லி இயக்கிய தெறி படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதனைத் தொடர்ந்து தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில், அட்லி இந்த படத்தின் தயாரிப்பாளாகளில் ஒருவராக மாறியுள்ளார். தமிழில் சமந்தா நடித்த கேரக்டரில் இந்தியில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன