Connect with us

இலங்கை

யாழில் லண்டன் வாழ் தமிழருடன் வீட்டிலிருந்த மனைவி… gps வைத்து கையும் களவுமாகப் பிடித்த ஐயர்!

Published

on

Loading

யாழில் லண்டன் வாழ் தமிழருடன் வீட்டிலிருந்த மனைவி… gps வைத்து கையும் களவுமாகப் பிடித்த ஐயர்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் பகுதியில் கோவில் ஒன்றின் ஐயர் தனது மனைவியை லண்டனிலிருந்து வந்த நபரொவருடன் வீடொன்றில் வைத்து கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

வலிகாமம் பகுதியில் உள்ள ஐயரின் கோவில் திருவிழா ஒன்றின் உபயகாரரான லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் குறித்த கோவிலுக்காக நன்கொடைகளை வழங்கி வந்துள்ளார்.

மேலும், ஐயரின் மனைவியின் ஒத்துழைப்புடன் அறக்கொடை நிதியம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

இந்த உதவிகளை கோவில் ஐயரின் மனைவி ஊடாகவே குறித்த குடும்பஸ்தர் செய்து வந்துள்ளார்.

Advertisement

இவ்வாறு இருக்கையில், லண்டன் குடும்பஸ்தருடன் இரவில் தொடர்ச்சியாக வாட்ஸ்அப்பில் தனது மனைவி கதைப்பது தொடர்பாக கோவில் ஐயருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஐயர் தனது மனைவியைக் கண்காணிக்கத் தொடங்கியதாக தெரியவருகின்றது.

மனைவியின் மோட்டார் சைக்கிளுக்குள் இரகசியமாக ஜி.பி.எஸ் கருவியை பொருத்தி மனைவியின் நடமாட்டத்தை ஐயர் அவதானித்து வந்துள்ளார். 

Advertisement

கடந்த வாரம் லண்டன் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வந்துள்ளார். இதன் பின்னர் ஐயர் மும்முரமாக மனைவியை அவதானிக்கத் தொடங்கியதாக தெரியவருகின்றது.

 கடந்த வியாழக்கிழமை மனைவியின் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த GPS  வேறுவொரு இடத்தை காட்டிக் கொண்டிருந்ததை ஐயர் அவதானித்துள்ளார்.

ஜி.பி.எஸ் கருவி காட்டிய அடையாளத்தை வைத்து மனைவி தங்கி நின்ற வீட்டை கண்டு பிடித்த ஐயர் வீட்டின் உள்ள இருந்த லண்டன் குடும்பஸ்தரையும், மனைவியும் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

Advertisement

இச்சம்பவத்தின் போது அங்கு கை கலப்பான நிலையில் லண்டன் குடும்பஸ்தரும் ஐயரின் மனைவியும் கடுமையாகத் தாக்கப்பட்ட்டுள்ளனர்.

அதன் பின்னர் தாக்குதலுக்கு உள்ளான குறித்த வீட்டுக்கு பொலிசார் வந்து விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.

  

Advertisement

நேற்று முன்தினம் லண்டன் குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸார் ஐயரையும் மனவைியையும் விசாரித்துள்ளனர்.

இதன்போது, லண்டன் குடும்பஸ்தரின் அறக்கொடை நிதியக் கணக்கு வழக்குகளை தெரிவிக்கவே தான் குறித்த குடும்பஸ்தர் வீட்டுக்கு சென்றதாகவும் அதனை தனது கணவன் தவறாக எடுத்து தாக்கியதாகவும் மனைவி முறைப்பாடு கொடுத்ததுடன் லண்டன் குடும்பஸ்தர் கணவன் மீது போட்ட முறைப்பாட்டை மீளப் பெறுமாறு கேட்டு முறைப்பாட்டை மீளப்பெற்றுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன