வணிகம்
4 % வட்டியில் ரூ. 3 லட்சம் வரை கடன்! கிசான் கிரேடிட் கார்ட் பெறுவது எப்படி?

4 % வட்டியில் ரூ. 3 லட்சம் வரை கடன்! கிசான் கிரேடிட் கார்ட் பெறுவது எப்படி?
கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) திட்டம், விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்டது. இது வங்கிகள் மூலம் நெறிப்படுத்தப்பட்ட கடன் ஆதரவு அமைப்பை வழங்குகிறது. மேலும், சரியான நேரத்தில் போதுமான நிதி உதவியை இத்திட்டம் உறுதி செய்கிறது.கேசிசி திட்டம் கடன் செயல்முறையை எளிதாக்கி, விவசாயிகளுக்கு ஏற்ற அணுகுமுறையை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது.கிசான் கிரெடிட் கார்டு கடன்களுக்கான கட்டணங்கள் மற்றும் செயல்முறைகள்மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, கேசிசி திட்டத்தின் பல்வேறு அம்சங்களை இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. திட்டத்தின் கீழ் கட்டணங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் ஆவணத் தேவைகள் பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியதை பார்க்கலாம்.ரூ. 3 லட்சம் வரையிலான கடனுக்கு கட்டணம் இல்லைஅரசு வழங்கிய தகவலின்படி, ரூ. 3 லட்சம் வரையிலான கேசிசி கடன்களுக்கான செயலாக்கம், ஆவணங்கள், ஆய்வு மற்றும் பிற சேவைக் கட்டணங்களை தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கத்தில் உள்ளது. எவ்வாறாயினும், ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு, செயலாக்கக் கட்டணம் மற்றும் ஆய்வுச் செலவுகள் போன்ற கட்டணங்கள் தனிப்பட்ட வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.கிசான் கிரெடிட் கார்டுக்கு மாதம்/அரையாண்டு/வருடாந்திர அடிப்படையில் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “கேசிசி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 7% சலுகை வட்டி விகிதத்தில் கிடைக்கும். கூடுதலாக, கடனை உடனடியாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகள் 3% வட்டி மானியத்தைப் பெறலாம், இதன் மூலம் வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 4% ஆகக் குறைக்கலாம். 3 லட்சத்துக்கும் மேலான கடனுக்கான வட்டி விகிதங்கள் அந்தந்த வங்கியின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளால் தீர்மானிக்கப்படுகின்றன“ எனத் தெரிவித்தார்.கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் வங்கியின் இணையதளத்தைப் பார்வையிடவும்.வங்கியின் இணையதளத்தில் உள்ள விருப்பங்களின் பட்டியலிலிருந்து, கிசான் கிரெடிட் கார்டை தேர்வு செய்யவும்.‘விண்ணப்பிக்கவும்’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் விண்ணப்பப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.தேவையான விவரங்களுடன் படிவத்தை நிரப்பி, ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பக் குறிப்பு எண் உங்களுக்கு அனுப்பப்படும்.நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், அடுத்த செயல்முறைக்கு 3-4 வேலை நாள்களுக்குள் வங்கி உங்களைத் தொடர்பு கொள்ளும்.