பொழுதுபோக்கு
ரோஜா ஹீரோவுக்கு ஜோடியான தனுஷ் பட நடிகை: புதிய சீரியல் ப்ரமோ வைரல்!

ரோஜா ஹீரோவுக்கு ஜோடியான தனுஷ் பட நடிகை: புதிய சீரியல் ப்ரமோ வைரல்!
சின்னத்திரையில் அடுத்து ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில், நடிகை சாயா சிங் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில், இந்த சீரியல் மூலம் அவர் மீண்டும் சின்னத்திரையில் ரீஎண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில், ஒரு சில சீரியல்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவ்வப்போது புதிய சீரியல்களையும் களமிறங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது புதிதாக மனசெல்லாம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, சமீபத்தில் அதன் ப்ரமோவும் வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து, கெட்டிமேளம் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பரப்பாக உள்ளதாகவும், ஜீ தமிழ் வரலாற்றில் முதல் முறையாக இந்த சீரியல் ஒருமணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலின் ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரோஜா சீரியல் புகழ் சுப்பு சூரியன், விராட், பொன்வண்ணன், பிரவீனா ஆகியோருடன், திருடா திருடி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சாயா சிங் நடிக்க உள்ளார்.சிவராமன் கேரக்டரில் பொன்வண்ணன், லட்சுமி கேரக்டரில் பிரவீனா, துளசி கேரக்ரில், சாயா சிங், வெற்றி கேரக்டரில் சுப்பு சூரியன் ஆகியோர் நடிக்கின்றனர். சன்டிவியில் ஒளிபரப்பான அன்பே வா சீரியல் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் விராட் இந்த சீரியல் மூலம் ஜீ தமிழில் என்ட்ரி ஆக உள்ளார். அவர் மகேஷ் என்ற கேரக்டரில் நடிக்கிறார். மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்த நடிகை அஞ்சலி இந்த சீரியலில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏற்கனவே சன்டிவியின் பூவே உனக்காக, ரன், உள்ளிடட சீரியல்களில் நடித்துள்ள சாயா சிங், இந்த சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் மீண்டும் ரீ-என்டரி கொடுக்க உள்ளார். சமீபத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான பைரனி ரனகல் படத்தில் அவரின் தங்கை கேரக்டரில் சாயா சிங் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது சாயா சிங் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“