Connect with us

இலங்கை

போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும்- சிறீதரன் தெரிவிப்பு!

Published

on

Loading

போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும்- சிறீதரன் தெரிவிப்பு!

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடாத்திய சிறப்பு ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

Advertisement

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் தமிழரசுக்கட்சியின் பால் அலையை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது.தமிழரசுக்கட்சிக்குள் உள்ளவர்களுக்கும் இந்த நிலை ஆதங்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயரீதீயில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன் தலைவராக தெரிவு செய்த என்னை எமது கட்சிக்குள் வழக்குக்போட்டு செயற்படாது தடுத்தனர்.மக்கள் இது தொடர்பாக செய்தி சொல்ல முற்படுகின்றனர்.நாங்கள் போகின்ற இடங்களிலும் சொல்கின்றனர்.

எமது கட்சிக்குள் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து எனக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது.

Advertisement

மக்களுக்கு சொல்லி வருகின்றேன்  நான் கிளிநொச்சியிலிருந்து யாருக்காவது பார் அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் அதனை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து என்னை விலக்கி விடுங்கள் அதை எல்லாம் செய்ய முடியாதவர்  ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பார் தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார்.

அதனை ஒருவர் என்னுடைய கடிதத்தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதி கோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார்.

அதிலே சித்தார்த்தனுடைய பெயரும் குறிப்பிட்டிருக்கிறது. என்னுடைய கடித தலைப்பில் நான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து சித்தார்த்தனுடைய பெயர் எப்படி வரும் இதன் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள் பொலிஸ் நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

Advertisement

மக்களிடம் ஒன்றை சொல்கிறேன் மக்கள் என்னை  நம்புங்கள்  மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என தெரிவித்தார்.  (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன