இலங்கை
டெங்கு பரவும் அபாயத்தில் கிளி. பேருந்து நிலையம்!

டெங்கு பரவும் அபாயத்தில் கிளி. பேருந்து நிலையம்!
கிளிநொச்சி பொது பேருந்து தரிப்பிடத்தின் வளாகத்தை சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் காணப்படுபவதோடு ஆங்காங்கே பிளாஸ்டிக் போத்தல்களும் டெங்கு பரவக்கூடிய வகையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி பேருந்து தரிப்பிட மலசல கூடத்தின் கழிவுநீர் பயணிகள் பாவனையில் உள்ள இடங்களில் வெளியேறுதல் மற்றும் தரிப்பிட வளாகம் மிகவும் அசுத்தமாக காணப்படுகின்றமை தொடர்பான செய்திகள் மூலம் பலமுறை தெரியப்படுத்திய போதும் உரிய அதிகாரிகள் அது தொடர்பாக எவ்வித செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இப்பேருந்து நிலையமானது வட மாகாணத்தின் மத்தியில் காணப்படுவதோடு தென்பகுதியில் இருந்து வருகின்ற யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் மத்தியில் காணப்படுவதனால் பேருந்து நிலையத்திற்கு நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்வதனால் இச்சுகாதார சீர்கேடால் பயணிகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். (ச)