சினிமா
டேய் சேது சார் தெரியல தள்ளி நில்லுங்கடா! விடுதலை-2 சூட்டிங்கில் வெற்றிமாறன் செய்த ரகளைகள்!

டேய் சேது சார் தெரியல தள்ளி நில்லுங்கடா! விடுதலை-2 சூட்டிங்கில் வெற்றிமாறன் செய்த ரகளைகள்!
பிரபல இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை-2 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பாக ரகளைகள் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விடுதலை-2. நடிகர் சூரி, விஜய் சேதுபதி , நடிகை மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியாகி விமர்சனம் ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அதில் இயக்குநர் வெற்றிமாறன் ஷூட்டிங் நேரத்தில் ஸ்பாட்டில் இருப்பவர்களுடன் கலகலப்பாக பேசி எப்படி சூட் எடுக்கிறார் என்று காட்டும் விதமாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில் வெற்றிமாறன் தனது உதவி குழுவினர், சபோட்டிங் நடிகர்களிடம் “இப்படி கிடையாதுடா இப்படி நில்லுங்கடா” என்று போஸ் சொல்லி கொடுக்கிறார், சைக்கிலில் ஏறி “வந்ததனால் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை” என்று பாட்டுபாடுகிறார். “வழி விடுங்கடா டேய் சேது சேர் தெரியமாட்டிக்கிறாரு டேய்” என்று மைக்கில் சொல்கிறார் இதனை கேட்டு செட்டில் உள்ள அணைவரும் சிரிக்கிறார்கள். “அழுகண்ணும் அக்கா சிரிச்சிகிட்டே அழுக கூடாது” என்று இவர் செய்த சேட்டைகள் தொகுப்பாக இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.