Connect with us

இந்தியா

டாப் 10 நியூஸ் : மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முதல் விஜயகாந்த் குருபூஜை வரை!

Published

on

Loading

டாப் 10 நியூஸ் : மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முதல் விஜயகாந்த் குருபூஜை வரை!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு, டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் படித்துறை பகுதியில் இன்று (டிசம்பர் 28) காலை 11:45 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆளுநர் ரவி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பகல் 12:30 மணிக்கு ஆய்வு மேற்கொள்கிறார்.

Advertisement

!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆகிறது. அதனையொட்டி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடமான கேப்டன் ஆலயத்தில் இன்று நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வருகிறது.

Advertisement

பாமக சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து பேசியதைக் கண்டித்து, விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தொழில்நுட்ப பணிகள் காரணமாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவை இணையதளம் இன்று காலை 10 மணி முதல் 31-ந்தேதி மாலை 4 மணி வரை 4 நாட்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை AM ஜெயின் கல்லூரி மைதானத்தில் இன்று “Vijay Antony 3.0- இன்னிசை கச்சேரி” நடைபெறவுள்ளதை அடுத்து அதில் பங்கேற்கும் குறிப்பிட்ட பயணிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன