இலங்கை
பாடசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் படுகாயம்!

பாடசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் படுகாயம்!
கிளிநொச்சி ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி – மத்திய ஆரம்ப வித்தியாலயம் முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சியில் இருந்து முறிகண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியைக் கடக்க முயன்ற துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின.
இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு நபர்களும் படுகாயமடைந்துள்ள நிலையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றி கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏ9 வீதியில் பாடசாலையை குறிக்கும் பதாகை அமைக்கப்பட்டிருந்ததுடன் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் பாதசாரிகள் கடவை இருந்தும் அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் துச்சக்கர வண்டியில் பாதையை கடக்க முற்பட்டவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.