இலங்கை
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் வீதிச்சமிக்ஞையில் மோதி விபத்து!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் வீதிச்சமிக்ஞையில் மோதி விபத்து!
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகன சாரதியின் நித்திரை கலக்கமே இவ்விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் சாரதிக்கு எவ்வித ஆபத்தும் சம்பவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ச)