Connect with us

சினிமா

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.. விஜயகாந்த்தின் மறக்க முடியாத 8 போலீஸ் கேரக்டர்கள்

Published

on

Loading

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.. விஜயகாந்த்தின் மறக்க முடியாத 8 போலீஸ் கேரக்டர்கள்

எடுப்பான காக்கி சட்டை, அதிர வைக்கும் வசனங்கள், மொத்த கோபத்தையும் கண் புருவத்தில் காட்டுவது என்பது கேப்டனுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

விஜயகாந்த் மற்ற காட்சிகளில் நடிப்பதை காட்டிலும் சண்டைக் காட்சிகளில் மிரள வைத்து விடுவார். அதிலும் போலீஸ் கேரக்டரில் வில்லனை வெளுத்து வாங்க வேண்டும் என்றால் அதற்கு விஜயகாந்த் தான் சரியான ஆள்.

Advertisement

அவருடைய நடிப்பில் மறக்க முடியாத எட்டு போலீஸ் கேரக்டர்களை பற்றி பார்க்கலாம்.

விஜயகாந்த் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு ரிலீசான படம் தான் மாநகர காவல். இந்திய பிரதமரை படுகொலையில் இருந்து காப்பாற்றும் போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்திருப்பார்.

1991 ஆம் ஆண்டு ஆர் கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வெளியான படம் தான் கேப்டன் பிரபாகரன்.

Advertisement

இதற்கு பிறகு தான் விஜயகாந்த் கேப்டன் என்ற அடைமொழி வந்தது. இந்த படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு தன்னுடைய மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் தான் சேதுபதி ஐபிஎஸ்.

பள்ளி குழந்தைகளை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து காப்பாற்றும் கதை களத்துடன் இந்த படம் வெளியாகி இருந்தது. விஜயகாந்திற்கு ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்தது.

Advertisement

1990 ஆம் ஆண்டு இயக்குனர் கே சுபாஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வெளியான படம் தான் சத்ரியன்.

இந்த படம் அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்ததோடு, சினிமா கேரியரிலும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

இயக்குனர் கே எஸ் ரவி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வெளியான படம் தான் ஹானஸ்ட் ராஜ்.

Advertisement

10 வருடங்களாக கோமாவில் இருக்கும் காவல் அதிகாரி விஜயகாந்த், கோமாவில் இருந்து மீண்டு வந்து தன்னுடைய நெருங்கிய நண்பனை பழிவாங்க துடிக்கிறார்.

இதற்கு என்ன காரணம் என்பது தான் படத்தின் கதை.

ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் புலன்விசாரணை திரைப்படத்தில் நடித்தார்.

Advertisement

ஆனந்த்ராஜ், சரத்குமார் உடன் இந்த படத்தில் விஜயகாந்த் சண்டையிடும் காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

கடந்த 2000 ஆண்டு விஜயகாந்த் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான படம் தான் வல்லரசு. விஜயகாந்தின் வழக்கமான போலீஸ் படங்களை போல இந்த படமும் அவருக்கு வெற்றியைத் தான் தேடிக் கொடுத்தது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன