வணிகம்
விபத்து காப்பீடு முதல் இலவச ரூபே கார்ட் வரை; ஜன் தன் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சங்கள்!

விபத்து காப்பீடு முதல் இலவச ரூபே கார்ட் வரை; ஜன் தன் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சங்கள்!
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா: பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் சில அறியப்படாத சலுகைகள் குறித்து அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.ராஜ்யசபாவில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தால் பயன்பெற்றவர்கள், அத்திட்டத்தில் இருந்து கிடைக்கப்பெறும் சலுகைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.நவம்பர் 13, 2024 நிலவரப்படி, நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 53.99 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் மட்டும் 1.90 கோடி கணக்குகள் உள்ளன.பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சங்கள்:இந்தத் திட்டம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ. 10,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதியை வழங்குகிறது. தேவைப்படுபவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.கூடுதலாக, இத்திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் இலவச RuPay டெபிட் கார்டைப் பெறுகிறார்கள். இது ரூ. 2 லட்சம் வரை உள்ளடங்கிய விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துடன் வருகிறது. காப்பீட்டுப் பலன்களைப் பெற, பயனாளிகள் தங்கள் ரூபே கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம், மைக்ரோ ஏடிஎம், இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் அல்லது பிஓஎஸ் டெர்மினல் போன்ற எந்தவொரு வசதி மூலமாகவும் பணப்பரிவர்த்தனை செய்யலாம். இதனை விபத்து நடந்த 90 நாட்களில் செய்து முடித்திருக்க வேண்டும்.அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு, கடன் சலுகைகள், காப்பீடு, ஓய்வூதியம் போன்றவற்றை சுலபமான முறையில் பெறுவதற்காக தேசிய அளவில் தொடங்கப்பட்டது இத்திட்டம்.இத்திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடி பலன் பரிமாற்றம், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, முத்ரா ஆகிய திட்டங்களுக்கு தகுதி பெறுகிறார்கள்.