சினிமா
தோசை இல்ல கீர்த்தி…வடநாட்டு பத்திரிக்கையாளர்களால் அசிங்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்..

தோசை இல்ல கீர்த்தி…வடநாட்டு பத்திரிக்கையாளர்களால் அசிங்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தான் திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கையில் இணைந்தார். ஆனால், திருமணம் ஆன 2 நாளில் தன் படமான பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் செம பிஸியாகிவிட்டார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மும்பையில் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக பல இடங்களுக்கு சென்று வருகின்றார்.அப்படி அவர் செல்லும் போது முதலில் பத்திரிக்கையாளர்கள் கிரீத்தி என்று கூறி அழைத்துள்ளனர். அதற்கு கீர்த்தி என்றும் பதிலளித்தார்.அதன்பின் பத்திரிக்கையாளர்கள் தோசை(Dosa) என்று கூறியதற்கு நான் கீர்த்தி, தோசை இல்லை கீர்த்தி சுரேஷ், ஆமாம் எனக்கு தோசை பிடிக்கும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.தோசை என்ற வார்த்தையை வடநாட்டினர் தென்னிந்திய நடிகர் நடிகைகளை அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.