Connect with us

சினிமா

மலைப் பாம்புடன் TTF வாசன் செய்த சாகசம்! அல்லேக்கா தூக்கிய வனத்துறையினர்

Published

on

Loading

மலைப் பாம்புடன் TTF வாசன் செய்த சாகசம்! அல்லேக்கா தூக்கிய வனத்துறையினர்

தமிழ்நாட்டில் பிரபல யூட்யூபராக காணப்படுபவர் டிடிஎஃப் வாசன். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தின் ஊடாக சினிமாவில் அறிமுகமாவதற்கு இருந்தார். எனினும் இந்த படத்தின் இயக்குநருக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டிடிஎஃப் வாசன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.டிடிஎஃப் வாசன் பைக் ரேஸ் ஓடி அதனை வீடியோவாக வெளியிடுவார். இவர் வெளியிடும் வீடியோவை பார்ப்பதற்காகவே  பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். மேலும் இவர் செய்யும் சாகசங்களை பின்தொடர்ந்து  இளைஞர்கள் பலரும் முயற்சி செய்தும் உள்ளனர்.d_i_aஇன்னொரு பக்கம்டிடிஎஃப் வாசன் பல சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் வேகமாக பைக், கார்களை ஓட்டிக்கொண்டு வீடியோ எடுத்து அடிக்கடி விபத்துகளிலும்  சிக்கிக் கொள்ளுவார். ஆனாலும் இவரை ஆதரிக்கும் ரசிகர்கள் ஏராளம்.இந்த நிலையில், தற்போது கார் ஓட்டிக்கொண்டு கையில் மலை பாம்பு ஒன்றை வைத்துள்ள  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் வனத்துறை அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்து உள்ளார்கள்.மேலும் அனுமதி இல்லாமல் பாம்பை வளர்க்க முடியாது என்ற காரணத்தினால் விசாரணை நடத்தி அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன