இலங்கை
வெள்ளத்தில் மூழ்கிய காலி நகரின் பல வீதிகள்
வெள்ளத்தில் மூழ்கிய காலி நகரின் பல வீதிகள்
நாட்டில் நேற்று (29) இரவு பெய்த கடும் மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
காலி – வக்வெல்ல, காலி – மாபலகம, காலி – பத்தேகம ஆகிய பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மழைநீரை முறையாக வெளியேற்றுவதற்கு கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை துப்புரவு செய்யாமை மற்றும் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களால் சிறு மழை பெய்தாலும் காலி நகரம் வெள்ளத்தில் மூழ்குவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
