Connect with us

இலங்கை

புலிகள் காடு மாறினாலும் அதன் புள்ளிகள் மாறாது; அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் !

Published

on

Loading

புலிகள் காடு மாறினாலும் அதன் புள்ளிகள் மாறாது; அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் !

  புலிகள் காடு மாறினாலும் அதன் உடலில் உள்ள புள்ளிகள் மாறாது என அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ள சில இராணுவப் பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சூழ்ச்சி நடக்கலாம் எனவே, பாதுகாப்புத் தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தெரிவித்தார்.

Advertisement

அதோடு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில்தான் நந்திக் கடலில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால் சர்வதேச ரீதியில் அவர் எதிர்கொண்ட அழுத்தங்கள் ஏராளம்.

போர் இவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் எமது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம்கூட இதன் ஓர் அங்கம்தான்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் மஹிந்தவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்று எவராலும் கூற முடியாது. எனவே, மஹிந்தவைப் பாதுகாக்க வேண்டியது எமது இனத்தின் கடப்பாடாகும்.

Advertisement

76 ஆண்டு கால சாபத்துக்கு முடிவுகட்டத்தான் அநுரவை ஜனாதிபதியாக்கினார்கள். எனவே, அவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி மாளிகை பகுதிகளில் உள்ள வீதிகளில் இருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இருந்த இராணுவப் பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன.

Advertisement

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்தி சூழ்ச்சி செய்கின்றனரா என்பது பற்றி பாதுகாப்புத் தரப்பினர் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் புலிகள் காடு மாறினாலும் அதன் உடலில் உள்ள புள்ளிகள் மாறாது என்பார்கள்.

ஜனாதிபதி செயலக வீதிகளைத் திறக்க முடியும் என்றால், திவுலபத்தான வீதியை ஏன் திறக்க முடியாது என்றும் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கேள்வி எழுப்பினார்.    

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன