சினிமா
விடுதலை-2 வெற்றியை கொண்டாடிய வெற்றிமாறன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
விடுதலை-2 வெற்றியை கொண்டாடிய வெற்றிமாறன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் விடுதலை 2 திரைப்படம் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியில் வெற்றிபெற்றதால் இயக்குநருக்கு தயாரிப்பாளர்கள் மாலை போட்டு விடுதலை-2 வெற்றியை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம் வருகிறது. விடுதலை-2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து சேத்தன், கென் கருணாஸ், கௌதம் வாசுதேவ் மேனன், ஆகியோரம் நடித்திருந்தனர். இந்த படத்தை ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, இசைஞானி இளையராஜா இதற்கு இசையமைத்திருந்தார்.விடுதலை 1 திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியிடப்பட்டது. அதன்படி இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. எனவே விடுதலை 2 படத்திற்கு கிடைத்த வெற்றியை வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, சேத்தன் ஆகியோர் மற்ற படக்குழுவினருடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அப்போது தயாரிப்பாளர்கள் இயக்குநர் வெற்றிமாறனுக்கு மாலை போட்டு கௌரவபடுத்தியுள்ளனர். இந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
