இந்தியா
ஆபரேஷன் திரிசூல்: புத்தாண்டை ஒட்டி 48 பேர் மீது வழக்குப் பதிவு

ஆபரேஷன் திரிசூல்: புத்தாண்டை ஒட்டி 48 பேர் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை ஒழிப்பதற்கும் ஆபரேஷன் திரிசூல் திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி, ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்களின் வீடுகளில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்ய நேற்று அதிகாலை ஆபரேஷன் திரிசூல் மேற்கொள்ளப்பட்டது.டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியார் எஸ்.பி., கலைவாணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், கிரைம் போலீசார் இணைந்து புதுச்சேரி முழுதும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.அதில், 269-க்கும் மேற்பட்ட குற்ற பின்னணி உடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், 4 பிடியாணை நிறைவேற்றப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு, மக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடிய 48 பேர் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த ஒரு குற்றவாளி, ஆபத்தான ஆயுதம் வைத்திருந்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.