இலங்கை
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் முன்னெடுக்கப்படும் விசேட போக்குவரத்து திட்டம்!
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் முன்னெடுக்கப்படும் விசேட போக்குவரத்து திட்டம்!
2025 புத்தாண்டை முன்னிட்டு காலி முகத்திடலை அண்மித்த பகுதியில் நாளை (31) அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
கொழும்பு நகருக்கு வெளியில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக பெருந்தொகையான மக்களும் வாகனங்களும் நாளை காலி முகத்துவார பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக கொழும்பு நகரை மையமாகக் கொண்ட கொழும்பு கொட்டுவ, கொம்பஜ்னவீதிய, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, குருந்துவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அதற்காக விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
