Connect with us

இலங்கை

உப்பு அதிகமாக சாப்பிடுவது வயிறு புற்றுநோயை உண்டாக்குமா?

Published

on

Loading

உப்பு அதிகமாக சாப்பிடுவது வயிறு புற்றுநோயை உண்டாக்குமா?

உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்று கூறுவார்கள், ஏனெனில் ஒரு உணவின் சுவையை நிர்ணயிப்பதில் உப்பு மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது 

இரத்த அழுத்தம், உடலில் எலக்ட்ரோலைட் அளவுகள் மற்றும் பல செயல்பாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோடியத்தின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.

Advertisement

உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி அதிகளவு உப்பு வயிற்று புற்றுநோயையும் உருவாக்கும் என்பது நம்மில் பலரும் அறியாதது. 

அதிகளவு உப்பு சாப்பிடுவதன் மூலம் வயிற்று புற்றுநோய் எவ்வாறு உருவாகின்றது வயிறு புற்றுநோயை எப்படித் தடுக்கலாம்? என இப்பதவில் நாம் பார்ப்போம்.

பொதுவாக மக்கள் ஒரு நாளைக்கு சுமார் 4-6 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள். 

Advertisement

கருவாடு, உப்பு மீன், உப்பு இறைச்சி, காய்கறிகள் மற்றும் ஊறுகாய் போன்ற உணவுகளில் உப்பு அதிகம் உள்ளது, மேலும் இவற்றின் அதிகப்படியான நுகர்வு தீங்கு விளைவிக்கும்.

அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட மற்றொரு உணவுப் பொருள் சோயா சாஸ் ஆகும், இது பொதுவாக ஓரியண்டல் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

உப்பு மட்டுமின்றி இந்த வகை உணவுகளில் மிளகாயும் அதிகமாக உள்ளது, இது ஆபத்தை இருமடங்கு அதிகரிக்கும். 

Advertisement

உப்பு வயிற்றின் உட்புறத்தை சேதப்படுத்துகிறது. இதனால் வயிறு அமிலத்தால் சேதமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இது வயிற்றின் புறணியை குடல் வகை எனப்படும் வகையாக மாற்றலாம்.

இந்த வகை புறணி புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு அதிகம். வயிற்றில் உள்ள ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியா உப்பு நிறைந்த சூழலில் நன்றாக வளர்கிறது. இந்த பாக்டீரியாக்கள் வயிற்று புற்றுநோய்க்கான ஆபத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும்

அதிகமாக உப்பு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் வயிறு புற்றுநோய் பாதிப்பைத் தவிர்க்கலாம். சமைத்த உணவில் கூடுதல் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்க்கப்பட்ட இறைச்சிகள் மற்றும் ஊறுகாய் போன்ற உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Advertisement

பழங்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை உட்கொள்வது வயிறு புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன