Connect with us

இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல்!

Published

on

Loading

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல்!

நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவருகின்றன

இதன் ஒரு கட்டமாக  முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் காரியாலயத்தினால் இன்றைய தினம் (17) தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட  கலந்துரையாடல் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டுமண்டபத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட செயலர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

இதன்போது தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள்  தேர்தல் நாளில் முகவர்கள் ,கண்காணிப்பாளர்கள் ஊடகவியலாளர்கள், நடந்து கொள்ளவேண்டிய முறைகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லல் மீள கொண்டுவருதல் வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்புக்கள் சிறப்பு தேவையுடையோருக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான தெளிவூட்டலை முல்லைத்தீவு மாவட்ட  உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.ஜெனிற்றன் வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் திரு.எஸ்.குணபாலன், தேர்தல் பணிமனையின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரிகள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பிரதேச செயலாளர்கள், கட்சி முகவர்கள், கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் ,ஊடகவியலாளர்கள் என பலரும்  கலந்துகொண்டனர்.

சிறப்பாக இக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன