இலங்கை
நாட்டின் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவர்கள் சார்பில் வாழ்த்து!

நாட்டின் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவர்கள் சார்பில் வாழ்த்து!
நாட்டின் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதோடு சட்டவிரோத தொழில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளன உபதலைவரும் வடமாகாண கூட்டுறவு சங்கங்களின் சமாச உபதலைவருமான வி.அருள்நாதன் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (30) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார் இங்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாட்டின் ஐனாதிபதி அனுரகுமார திஸநாயக்கவுக்கு முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்கள் சார்பில் நல்லமுறையில் நாட்டினை கொண்டுசெல்வதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முல்லைத்தீவு கடலில் இனிவரும் காலத்தில் இறால் சீசன் தொடங்கவுள்ளது இதற்கு இடையூறாக இந்திய இழுவைபடகுகள் இருந்தன இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலமை காணப்படுகின்றது. இதனை விட முன்னாள் இருந்த கடற்தொழில் அமைச்சர் நாங்கள் வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவரின் முயற்ச்சியில் கைது செய்து கொண்டிருக்கின்றார்கள்
ஐனாதிபதிதான் தற்போது கடற்தொழில் அமைச்சராக இருப்பதன் காரணமாக அவரிடம் சில கோரிக்கையினை வைக்கின்றோம்
இந்திய இழுவைப்படகு மட்டும் இல்லை இலங்கையில் சட்டவிரோதமான தொழில்கள் அங்கிகரிக்கப்படாத தொழில்கள் அதிகமாக செய்து வருகின்றார்கள் இதனை கட்டுப்படுத்தும் அதிகாரிகள் கவனத்தில் எடுக்கின்றார்கள் இல்லை ஆகவே இந்த ஐனாதிபதி இலஞ்சம் ஊழல் போன்ற விடயங்களில் அக்கறையாக செயற்பட்டுவருகின்றார் ஆகவே இந்த மீனவ மக்களுக்கும் நடவடிக்கை எடுத்து எமது கடலினை காப்பாற்றி எமது சந்ததிகள் வாழவேண்டிய நிலையினை ஏற்படுத்தி தரவேண்டும்
எங்கள் கடலில் சட்டவிரோத தொழில்களை நிறுத்தி சட்டரீதியான தொழிலை கொண்டு வரவேண்டும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என அவர் சொல்லியுள்ளார் மீனவர்களுக்கு நவீனமயமாக்கல் தொழில் வலுவினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஏஏ மாவட்டத்தில் நவீன தொழில் செய்வதாக இருந்தால் காபர் இல்லை ஏனைய துறைமுகங்களை நம்பி தொழில்செய்யமுடியாது
இதற்கு முதல் இருந்த கடற்தொழில் அமைச்சர் நாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக 30 வீத சட்டவிரோத தொழில்களை நிறுத்தியுள்ளார். நீரியல் வளபணிமனையினை சரியானமுறையில் செயற்படுத்தியுள்ளார்.
தற்போது கடலில் சுருக்குவலை பாவிப்பதாக தொலைபேசியூடாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது ஆகவே ஐனாதிபதி இந்த விடையத்தினை கவனம் எடுத்து கடற்தொழில் அமைச்சும் ஐனாதிபதியிடம் இருப்பதால் அவரிடம் முற்கூட்டியே இந்த கோரிக்கையினை முன்வைக்கின்றோம்
இந்திய இழுவைப்படகு தொடர்பிலான கோரிக்கை எங்கள் கடற்படையினர் எவ்வாறு எல்லையில் நின்று தடுக்கின்றார்களோ அதேபோல் இந்தியகடற்படையினரும் இருக்கின்றார்கள்.
அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்.எங்கள் கடலுக்கு வருவதற்காக தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் எங்கள் கடலில் வந்து வளத்தினை அழிப்பதற்கு அவர்கள் எவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் இந்தியாவில் முழு வளத்தினையும் அழித்துவிட்டார்கள்.
அங்கிருந்து வரும் படகுகள் தொழிலாளிகளை கேட்கின்றார்கள் இலங்கை கடலுக்கு போவதென்றால் மட்டும் தொழிலுக்கு வாங்கோ என்று கேட்டு தொழிலாளர்களை திரட்டுகின்றார்கள் அங்குள்ள எம்.பி மாரின் படகுகள் தான் இங்கு வருகின்றன
அங்கும் இந்தியன் இழுவைப்படகுகள் வேண்டாம் என்று தமிழ்நாட்டின் சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது
ஆகவே ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல ஐனாதிபதி வந்துள்ளார் எங்கள் மீனவ மக்களின் பிரச்சினைகள் அனைத்தினையும் நிறுத்தி தருவார் என்ற நம்பிக்கை உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ப)