இலங்கை
கிளி.யில் இடம்பெற்ற கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடல்!
கிளி.யில் இடம்பெற்ற கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடல்!
2025ஆம் ஆண்டு தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆர்.சி அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மீளாய்வு மேற்கொள்ளும் முறைகள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
