இலங்கை
குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிப்பு!

குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிப்பு!
ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கட்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச வட்டாரகிளைகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த 18-08-2024 அன்று மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதிவேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து யாருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு கூடிமுடிவெடுக்காது முடிவு அறிவிக்கப்பட்டது மிகவும் தவறு.நாளைய தினம் குறித்த குழு கூடவுள்ளது. கூடி சில முடிவுகள் எடுக்கப்படலாம் என அவர் தெரிவித்தார். (ப)