இலங்கை
நெல்லுக்கு புதிய உத்தரவாத விலை!

நெல்லுக்கு புதிய உத்தரவாத விலை!
எதிர்வரும் நாட்களில் நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை அறிவிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உர நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
இந்த வாரத்திற்குள் அதனைப் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
அடுத்த பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னர் உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயம் மற்றும் கால்நடைவளத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.[ஒ]