இலங்கை
அநுர அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையீனம்! கண்டுபிடித்தது பெரமுன
அநுர அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையீனம்! கண்டுபிடித்தது பெரமுன
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சீவ எதிரிமான்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கும், செய்கின்ற செயலுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அதை மக்களும் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.
தங்களது பாரம்பரியக் கட்சிகளையெல்லாம் விட்டுவிட்டுதான் இந்த அரசாங்கத்துக்கு வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு வழங்கினார்கள். ஆனால் தற்போது அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவருவதை அவதானிக்க முடிகின்றது.
2015ஆம் ஆண்டு பின்னடைவைச் சந்தித்து 2018ஆம் ஆண்டில் மீண்டெழுந்ததுபோல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டெழும். அதற்கேற்ற வகையில் கட்சி கட்டியெழுப்படும்-என்றார்.
