Connect with us

வணிகம்

கொஞ்சுத் தமிழ் பேசி வியக்க வைக்கும் சீனாக்காரர்… 70 ஆண்டைக் கடந்து மலைக்க வைக்கும் கடை…

Published

on

Loading

கொஞ்சுத் தமிழ் பேசி வியக்க வைக்கும் சீனாக்காரர்… 70 ஆண்டைக் கடந்து மலைக்க வைக்கும் கடை…

ஊட்டி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. பல பகுதிகளிலிருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும், ஊட்டியில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்களும் வசித்து வருகின்றனர்.

ஊட்டியில் 1954 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சிங்கோஸ் சைனீஸ் ரெஸ்டாரன்ட் இன்றளவும் பிரபலமாக இயங்கி வருகிறது. இந்த கடை உரிமையாளரின் பெற்றோர்கள் சீனாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அங்கிருந்து கொல்கத்தாவிற்கு பிழைப்பு தேடி வந்ததாகவும், அதன் பின்னர் ஊட்டிக்கு வருகை புரிந்தவர்கள் இந்த ரெஸ்டாரன்டை உருவாக்கியுள்ளனர்.

Advertisement

பல்வேறு பகுதிகளிலிருந்து ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் விரும்பி வருகை புரிகின்றனர். இங்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். சிறப்பான முறையில் விற்பனையும் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: “கலக்கியை கண்டு பிடித்ததே நான் தான்” – இணையத்தைக் கலக்கிய நபரின் கைப்பக்குவம் தெரியுமா..?

மேலும், இந்த ரெஸ்டாரன்ட் பல்வேறு திரைப்படங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டியின் முக்கியமான பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகாமையிலேயே அமைந்துள்ளதால் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

Advertisement

இதுகுறித்து சிங்கோஸ் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் லியோ பௌ சுன் கூறுகையில்,“1954 ஆம் ஆண்டு எனது தந்தையார் இதனை துவக்கினார். முதலில் சிறிய அளவிலிருந்து ரெஸ்டாரன்ட் மெதுவாக மெதுவாக இதனை மேம்படுத்தினோம். நான் இரண்டு வயது முதல் இங்கதான் இருக்கிறேன். ஊட்டியில் பிரிக்ஸ் பள்ளியில் தான் கல்வி பயின்றேன். இந்த ரெஸ்டாரன்டில் சில்லி சிக்கன் , மஸ்ரூம் சூப் , சிக்கன் சாஸ் , பிரைட் ரைஸ் , நூடுல்ஸ் போன்றவை சிறப்பாக விற்பனையாகும்.

முன்னாள் மாணவர்களும் அதிகமாக வருகை புரிந்து நலம் விசாரிப்பார்கள். வார நாட்களில் உள்ளூர் வியாபாரமும் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிவார்கள் எனத் தெரிவித்தார். ஊட்டியில் வசிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன