Connect with us

சினிமா

ஓவர் குடிக்கு அடிமையாகி வாழ்க்கை இழந்துட்டார்.. நடிகை குஷ்பூ எமோஷ்னல்..

Published

on

Loading

ஓவர் குடிக்கு அடிமையாகி வாழ்க்கை இழந்துட்டார்.. நடிகை குஷ்பூ எமோஷ்னல்..

80, 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தவர் நடிகை குஷ்பூ. இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வந்தார் குஷ்பூ. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ராஜீவ் கபூருக்கு இதய பிரச்சனை இருந்தது.அதுமட்டுமின்றி மதுவுக்கு அவர் ரொம்பவே அடிமையாகியதால் அந்த பழக்கம் அவருக்கு பெரும் சிக்கலை உருவாக்கியது. இதனால் அந்த பழக்கத்தில் இருந்து அவரை வெளியே கொண்டு வர எவ்வளவோ நாங்கள் முயற்சித்தோம். ஆனால் எதுவும் பலன் கொடுக்கவில்லை.அவருக்கு முழங்காலிலும் பிரச்சனை இருந்தது. அதனை சரி செய்வதற்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் அவருக்கு அதுவும் உதவவில்லை. அவர் இறக்கும் போது நான் மும்பையில் தான் இருந்தேன்.முதன்முறையாக போனி கபூர்தான் ராஜீவின் இறப்பு செய்தியை எங்களுக்கு சொன்னார். ராஜீவிற்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவர் சுயநினைவில்தான் இருந்தார். அவர் தன் உடல்நிலையை ரொம்பவே அலட்சியமாக எடுத்துக்கொண்டார்.அவரது மரணம் எனக்கு அதிர்ச்சியைத்தான் கொடுக்கும் அவருடன் நெருங்கிய நண்பர்களாக நாங்கள் இருந்தோம் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் குஷ்பூ.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன