வணிகம்
அமெரிக்க குடியுரிமை பெற இவ்வளவு ரூல்ஸ் இருக்கா?

அமெரிக்க குடியுரிமை பெற இவ்வளவு ரூல்ஸ் இருக்கா?
அமெரிக்க நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டை பெறுவதற்கு பலதரப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குடும்பத்தின் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு வாயிலாகவோ இல்லையெனில் அமெரிக்க பொருளாதாரத்தில் முதலீடு செய்வதன் மூலமாகவோ கிரீன் கார்டை பெற முடியும்.குடும்பம் மூலமாக கிரீன் கார்ட் பெறும் முறை:நீங்கள் ஒரு அமெரிக்க குடிமகனின் வாழ்க்கை துணையாக அல்லது அமெரிக்க குடிமகனின் 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத குழந்தையாக அல்லது 21 வயதுடைய அமெரிக்க குடிமகனின் பெற்றோராக இருந்தால் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். அமெரிக்க குடியுரிமை பெற்றவரின் உறவினராக, அமெரிக்க குடியுரிமை பெறாத நபர் இருந்தால், அவர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என சட்டம் கூறுகிறது.வேலைவாய்ப்பு மூலம் கிரீன் கார்ட் பெறும் முறை:பல்வேறு விதமான வேலை பார்ப்பவர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக சில பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.முதல்தர முன்னுரிமை:அறிவியல், கலை, கல்வி, வணிகம், தடகளம், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பன்னாட்டு நிறுவன மேலாளர்கள் போன்றோருக்கு இதில் முதன்மையாக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இரண்டாம் தர முன்னுரிமை:மேம்பட்ட பட்டம் பெற்ற அல்லது அசாத்திய திறன் கொண்டவர்களுக்கு இரண்டாவது கட்டமாக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.மூன்றாம் தர முன்னுரிமை:திறன்சார் தொழிலாளர்கள் போன்றோர் இந்தப் பிரிவின் கீழ் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.முதலீடு மூலமாக கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை:இதேபோல், சுமார் 10 மில்லியன் டாலருக்கும் அதிகமாக அமெரிக்க பொருளாதாரத்தில் முதலீடு செய்பவர்களும் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.பதிவேட்டின் மூலம் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை:கடந்த 1972-ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு முன்னர் இருந்து நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தாலும் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் தற்போது சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் இருந்தாலும் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.கிரீன் கார்ட் பெற விண்ணப்பிக்கும் அளவுகோள்கள்:ஜனவரி 1, 1972க்கு முன் அமெரிக்காவிற்கு சென்றிருக்க வேண்டும். அமெரிக்காவிற்கு சென்றதில் இருந்து தொடர்ச்சியாக அங்கேயே வசித்திருக்க வேண்டும்.நன்மதிப்பு கொண்ட நபராக இருக்க வேண்டும்.