இந்தியா
சென்னை பீச் டூ தாம்பரம்… மின்சார ரயில் சேவை நாளை ரத்து!

சென்னை பீச் டூ தாம்பரம்… மின்சார ரயில் சேவை நாளை ரத்து!
பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை (ஜனவரி 5) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே இன்று (ஜனவரி 4) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தாம்பரம் பணிமனையில் நடைமேம்பால பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதற்கு மாற்றாக சென்னை கடற்கரை – பல்லாவரம் மற்றும் செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு பிறகு ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில் சேவை ரத்து காரணமாக, பயணிகள் வசதிக்காக தாம்பரம் – பல்லாவரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால், நாளை வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பலரும் கடைகளுக்கு சென்று புத்தாடை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்குவர். இந்தசூழலில், மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.