Connect with us

இந்தியா

ஹய்யா ஜாலி… பொங்கலுக்கு எத்தனை நாட்கள் லீவு தெரியுமா?

Published

on

Loading

ஹய்யா ஜாலி… பொங்கலுக்கு எத்தனை நாட்கள் லீவு தெரியுமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு இன்று (ஜனவரி 4) உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இவ்வாண்டு தமிழ்நாட்டில் ஜனவரி 14 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Advertisement

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14, 15, 16, 18, 19 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதால் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை ஏற்று, பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 25 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு அலுவர்கள், மாணவர்களுக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஜனவரி 11, 12 வார விடுமுறை அதனை தொடர்ந்து ஜனவரி 13 முதல் 16 வரை பொங்கல் விடுமுறை ஜனவரி 17 தற்போது விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18, 19 வார விடுமுறை என 9 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன