Connect with us

பொழுதுபோக்கு

நான் சி.எம். ஆகனும்… இன்னும் 10 வருஷத்தில் பாருங்க: நடிகை த்ரிஷா த்ரோபேக் வீடியோ வைரல்!

Published

on

Trisha Kanjivara

Loading

நான் சி.எம். ஆகனும்… இன்னும் 10 வருஷத்தில் பாருங்க: நடிகை த்ரிஷா த்ரோபேக் வீடியோ வைரல்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை த்ரிஷா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசிய ஒரு வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பிரஷாந்த் –சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் த்ரிஷா. அதனைத் தொடர்ந்து, அமீர் இயக்கிய மௌனம்பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமகமான இவர், அடுத்து விக்ரம், விஜய், அஜித், சூர்யா, கமல்ஹாசன், ஜெயம்ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.இடையில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வந்த த்ரிஷாவுக்கு வெற்றி கிடைக்காத நிலையில், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், குந்தவையாக நடித்து மீண்டும் தனது கெரியரை உயர்த்திக்கொண்டார். அதன்பிறகு படவாய்ப்புகள் த்ரிஷாவுக்கு குவிய தொடங்கியது. விஜயுடன் இணநை்து லியோ படத்தில் நடித்திருந்த த்ரிஷா, அஜித்துடன், விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.அதேபோல், கோட் படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனமாடிய த்ரிஷா கமல்ஹாசனுடன், தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரின் 45-வது படத்திலும் த்ரிஷா தான் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள த்ரிஷா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.அப்ப புரியல இப்ப புரியுது……. pic.twitter.com/gfijimfs1mதொகுப்பாளர் விஜய் சாரதி இந்த பேட்டியின் முடிவில், உங்களின் அடுத்த ப்ளான் என்ன என்று கேட்க, சி.எம்.ஆக வேண்டும் என்று த்ரிஷா சொல்கிறார். இதை கேட்ட தொகுப்பாளர், சினிமாவிலா அரசியலிலா என்று கேட்க, அரசியலில் தான் நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்னும் 10 வருடத்தில் என்று சொல்கிறார். இந்த வீடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன