வணிகம்
குட் நியூஸ்… கிராமுக்கு ரூ.120 குறைந்தது தங்கத்தின் விலை…!!

குட் நியூஸ்… கிராமுக்கு ரூ.120 குறைந்தது தங்கத்தின் விலை…!!
தங்கம் பொதுவாகவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் சர்வதேச சந்தை நிலவரம் படி தங்கத்தின் விலை தினமுமே ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படும்.இதனை அடுத்து கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்றைய (நவம்பர் 26)தங்கத்தின் நிலவரம் பற்றி தெரிந்து கொள்வோம்.அதன்படி நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7200 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 57,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றும் கிராமுக்கு 120 குறைந்து ரூ.7080 க்கும், ஒரு சவரன் 56,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் நேற்று 18 காரட் தங்கம் ஆபரணத்தின் விலை கிராமுக்கு ரூ.5940 க்கும், சவரன் ரூ.47,520 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5850 க்கும், ஒரு சவரன் ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை நிலவரம் பொறுத்த வரையிலும் கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க