நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 04/01/2025 | Edited on 04/01/2025

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக தனது கருத்தை சமூக வலைத்தள பக்கம் வாயிலாகப் பதிவு செய்து வருகிறார். முதல் முறையாக வெளியில் வந்து அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனச் சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.  

இந்த சந்திப்பு குறித்து தற்போது விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அதனால் இதையெல்லாம் செய்துதானே ஆக வேண்டும். நல்ல விஷயம் தான்” என்றார்.

Advertisement

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்காக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அது குறித்துக் கேட்ட கேள்விக்கு, “நல்ல விஷயத்துக்கு நல்லவர்கள் போராடுகிறார்கள். அவ்வளவுதான்” எனப் பதிலளித்தார்.