Connect with us

இந்தியா

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் தேதி இன்று மதியம் அறிவிப்பு

Published

on

Election del

Loading

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் தேதி இன்று மதியம் அறிவிப்பு

டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதியை இன்று (ஜன.7) மதியம் 2 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. டெல்லி தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான பதவிக்காலம் பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் ஆணையத்தின் தேதி அறிவித்த உடன்  மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வரும். ஆளும் ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கிறது.2015 மற்றும் 2020 தேர்தல்களில் முறையே 67 மற்றும் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. கடந்த இரண்டு சட்டசபைகளில் ஒற்றை இலக்கத்தில் பா.ஜ.க வென்றது. 15 ஆண்டுகளாக டெல்லியை  ஆட்சி செய்த காங்கிரஸ் முற்றிலும் தொடைத்து எரியப்பட்டது. தற்போதைய ஆம் ஆத்மிக்கு எதிராக போட்டியிடுகின்றன. மக்களவை தேர்தலை போன்று டெல்லி தேர்தலிலும் காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணி அமையும் என்று எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பா.ஜ.க சார்பில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன