Connect with us

சினிமா

நானும் ஒரு மனுஷிதான்..புலம்பும் பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா..

Published

on

Loading

நானும் ஒரு மனுஷிதான்..புலம்பும் பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா..

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றி மிகப்பெரிய ஆதவரை பெற்றவர் சீரியல் நடிகை அர்ச்சனா. தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்ட அருண் பிரசாத்துடன் காதலில் இருப்பதை பேசியிருந்தது வைரலானது.இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 வீட்டில் அருண் பிரசாத் சில தவறுகள் செய்தாலும் அர்ச்சனாவை திட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள். இதுபற்றி அறிந்த அர்ச்சனா உருக்கமான ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.அதில், என் வாழ்க்கையில் நான் இந்த இடத்திற்கு வர ஒவ்வொரு அடியும் பெரும் சவால்கள், விமர்சனங்கள், எண்ணற்ற தியாகங்களை சந்தித்தேன். இந்த கடின உழைப்பை யாரும் கவனிக்கவில்லை என்பதை நினைக்கும்போது மிகுந்த வேதனை அடைகிறேன்.அருண் பிரசாத்தும் நானும் வெவ்வேரு விருப்பங்களை கொண்ட தனித்தனி நபர்கள். எனக்கு இருக்கும் மற்ற நண்பர்களை போலவே நான் அவரை ஆதரிக்கிறேன். அதேசமயம் அவருடைய செயல்களுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்.இந்த இடத்திற்கு நான் கடுமையாக போராடி இருக்கிறேன். ஆனால் அந்த போராட்டத்தை மக்கள் மறந்துவிடுவதை நினைத்து மனமுடைந்து போயுள்ளது. நீங்கள் எனக்கு காட்டிய அன்பு, ஆதர்வு எல்லாவற்றையும் எப்போதும் மதிக்கிறேன், ஆனால் நான் செய்யாத ஒரு செயலுக்காக நீங்கள் என்னை விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொருவரும் தெளிவாக விளையாடி வருகிறார்கள், நான் இங்கே இருக்கிறேன், தயவு செய்து நானும் மனிதன் தான் என்பதை மறந்துவிடாதீர்கள், இது வார்த்தைகளால் சொல்ல முடியாத வலியாக இருக்கிறது என்று அர்ச்சனா உருக்கமாக ஒரு பதினை பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன