Connect with us

இந்தியா

கடல் வழியாக தமிழகம் சென்ற குடும்பங்களிற்கு நேர்ந்த அவலம்!

Published

on

Loading

கடல் வழியாக தமிழகம் சென்ற குடும்பங்களிற்கு நேர்ந்த அவலம்!

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச்  சேர்ந்த  இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைய தொடங்கினர்.

Advertisement

இது வரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில்  கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து 
மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களை அகதிகளாக இந்திய அரசு இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால்  இவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் எந்த விதமான நிவாரணமும்  கிடைக்கவில்லை எனவும்  தெரிவித்துள்ளனர்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன