இந்தியா
இந்திய ராணுவ வாகனத்தின் மீது நக்சலைட் தாக்குதல் – ஒன்பது வீரர்கள் பலி

இந்திய ராணுவ வாகனத்தின் மீது நக்சலைட் தாக்குதல் – ஒன்பது வீரர்கள் பலி
ராணுவ வாகனத்தின் மீது நக்சலைட் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் ஒன்பது பேர் வீர மரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் பகுதியில், திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ஒன்பது வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.