Connect with us

தொழில்நுட்பம்

வாக்காளர் பட்டியல் ரிலீஸ்; உங்கள் பெயர், வாக்குச் சாவடி சரி பார்ப்பது எப்படி?

Published

on

First time voters, Electors verification program

Loading

வாக்காளர் பட்டியல் ரிலீஸ்; உங்கள் பெயர், வாக்குச் சாவடி சரி பார்ப்பது எப்படி?

தமிழகத்தில் 2025-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பட்டியலை வெளியிட்டார். அதன் படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர் உள்ளனர். அதில் 3 கோடியே 11 லட்சத்து 74,027 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பெண் வாக்காளர்கள் மற்றும் 9120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். அதே போல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டத்தில்  உள்ள தொகுதிகள் மற்றும் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். இந்நிலையில், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை ஆன்லைன் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு,1. இந்திய தேர்தல் ஆணையத்தின்  https://voters.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கம் செல்ல வேண்டும். 2. அதன் பின் வலப்புறத்தில் உள்ள (right side)  ‘Search in Electoral Roll’  என்ற ஆப்ஷைனை கிளிக் செய்ய வேண்டும்.3.  இப்போது புதிய டேப் ஓபன் ஆகும் அதில், , Search by EPIC, Search by Details and Search by Mobile என்ற 3 ஆப்ஷன் காண்பிக்கப்படும். இதில் ஏதோ ஒன்றை செலக்ட் செய்து விவரங்களை கொடுத்தால் உங்கள் பெயர், வாக்குச் சாவடி எண், மையம், தொகுதி உள்ளிட்ட விவரங்கள் வரும். Search by EPIC ஆப்ஷன் கொடுத்தால் உங்கள் மாநிலத்துடன் EPIC எண் அதாவது வாக்காளர் அடையாள அட்டை எண் கொடுக்க வேண்டும். இதன் பின் விவரங்களை பெறலாம்.Search by Details ஆப்ஷன் கொடுத்தால்  உங்கள் பெயர், தந்தை/கணவர் பெயர், பிறந்த தேதி, இருப்பிடம் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும். அதன் பின் விவரங்களை பெறலாம். Search by Mobile ஆப்ஷன் மிகவும் எளிது. வாக்காளர் அடையாள அட்டை உடன் பதிவு செய்யப்பட்ட எண்யை கொடுத்தால் ஓ.டி.பி அனுப்பபடும் அதை இதில் உள்ளிட்டால் விவரங்களை பெற முடியும்.     

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன