Connect with us

சினிமா

ஜாக்குலின் – முத்துக்குமரன் இடையே காதல்.. சாச்சனா உடைத்த ரகசியம், அப்போ இதுதான் விஷயமா?

Published

on

Loading

ஜாக்குலின் – முத்துக்குமரன் இடையே காதல்.. சாச்சனா உடைத்த ரகசியம், அப்போ இதுதான் விஷயமா?

பிக் பாஸ் சீசன் 8 தற்போது பைனலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டு இருக்கிறது. 95 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த வாரம் ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் எக்ஸ் போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 8 போட்டியாளர்களுக்கும், வெளியேறி மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ள எக்ஸ் போட்டியாளர்களுக்கும் இடையே தான் இந்த வாரம் போட்டி நடைபெற்று வருகிறது.வீட்டிற்குள் வந்த எக்ஸ் போட்டியாளர்கள் வெளியே நடக்கும் விஷயங்கள் குறித்து பிக் பாஸ் வீட்டில் பேசி வருகிறார்கள். இதில் விஜே விஷால் காதல் நாயகனாக உலா வந்தார் என கூற அவர் மனமுடைந்து போனார்.அதை தொடர்ந்து ஜாக்குலின் மற்றும் முத்துக்குமரன் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை கண்டு சாச்சனா, உங்கள் இருவரையும் காதலிக்க விடமாட்டேன் என்று கூற அது இருவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது.இதனை முத்து கண்டித்தும் அதனை சாச்சனா கேட்கவில்லை. சாச்சனாவின் இந்த செயலால் வருத்தமடைந்த ஜாக்குலின், தீபக்கிடம் சென்று, “முத்து எனக்கு தம்பி மாதிரி, எனக்கும் அவனுக்கும் மூன்று வயது வித்தியாசம் இருக்கிறது.நாங்கள் எப்படி காதலிப்போம், சாச்சனாவிற்கு இது புரிய வேண்டாமா” என அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன