நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 10/01/2025 | Edited on 10/01/2025

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்ஜர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படம் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்து வந்தது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இப்படத்தை பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிற பொங்கலை முன்னிட்டு இன்று(10.01.2025) வெளியாகியுள்ளது. ஆனால் கலவையான விமர்சனத்தையே இப்படம் பெற்று வருகிறது. 

Advertisement

இந்த நிலையில் இப்படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, “இந்த படத்தின் ஒன் லைன் மதுரையில் இருக்கிற ஒரு கலெக்டரின் வாழ்க்கையில் நடந்ததை ஆந்திராவில் நடப்பது போல் கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருக்கிறார். இந்த ஒன் லைன் ஷங்கருக்கு ஏற்ற மாதிரி இருந்ததால் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார்” என்றார்.


<!–
–>

Advertisement

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement

–>