விளையாட்டு
மழை காரணமாக இடை நிறுத்தப்பட்ட இலங்கை – தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்!

மழை காரணமாக இடை நிறுத்தப்பட்ட இலங்கை – தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்!
டர்பனில் இன்று ஆரம்பமான இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று மதியம் 1.30மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கியது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 20.4 பந்துப்பரிமாற்றங்களில் 4இலக்குகள் இழப்புக்கு 80 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டு உணவு இடைவேளை முன்னதாக ஆரம்பிக்கப்பட்டது.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில லஹிரு குமார 2 இலக்குகளையும், அஷித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளையும் கைப்பற்றியுள்ளனர். (ச)