Connect with us

உலகம்

போப் பிரான்சிசுக்கு உயர்ந்த விருது வழங்கிய அமெரிக்க முன்னாள் ஜானாதிபதி!

Published

on

Loading

போப் பிரான்சிசுக்கு உயர்ந்த விருது வழங்கிய அமெரிக்க முன்னாள் ஜானாதிபதி!

அமெரிக்க ஜானாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் எதிர்வரும் 20ஆம் திகதி அமெரிக்காவின் 47ஆவது ஜானாதிபதியாக பதவியேற்க உள்ளதுடன் அந்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

அமெரிக்க ஜானாதிபதியின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டதுடம் ஜானாதிபதி ஜோ பைடன் முதல் முறையாக அந்த உயரிய விருதை வழங்கி வைத்துள்ளார்.

Advertisement

இதேவேளை, போப் பிரான்சிசிடம் தொலைபேசியில் உரையாடிய ஜானாதிபதி பைடன் ஏழை மக்களுக்கு சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன் இதுதொடர்பாக,  வெளியிட்ட செய்தியில், உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நீங்கள் காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை என்றார்.

மேலும், அமெரிக்காவின் வளர்ச்சி, பண்புகள், பாதுகாப்பு மற்றும் உலக அமைதி போன்றவற்றில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு ஜானாதிபதி மெடல் ஆப் பிரீடம் விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன